தண்டராம்பட்டு ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு


தண்டராம்பட்டு ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 28 கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

துணைத்தலைவர் பூங்கொடி நல்லதம்பி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அமர்ந்தனர்.

பின்னர் பொது நிதி, கனிமவள நிதி உள்ளிட்டவற்றை அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் சரிசமமாக பிரித்து வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் வழங்கக்கூடிய அடையாள அட்டையை ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர்.

அப்போது கூட்டத்திற்கு பிற துறை சார்ந்த அரசு அலுவலர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் தங்கள் பேச்சை நிறுத்தி கொண்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்யப் போவதாக கூறிவிட்டு கட்சி பாகுபாடின்றி அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story