குளச்சல் நகராட்சியில் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து உள்ளிருப்பு போராட்டம்
குளச்சல் நகராட்சியில் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி
குளச்சல்,
குளச்சல் நகராட்சியில் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
குளச்சல் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் கவுன்சிலர் ரமேஷ் (காங்கிரஸ்), தி.மு.க. கவுன்சிலர்கள் ரகீம், ஜான்சன் ஆகியோர் ஆணையரை மாற்ற வேண்டும் என பேசினர். இதற்கு கவுன்சிலர் அஜின்ரூத் (தி.மு.க.) பேசினார்.
இதனால் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷ், ரகீம், ஜான்சன் உள்பட 14 கவுன்சிலர்கள் மன்ற கூடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் தீர்வு ஏற்படாததால் அவர்கள் நேற்று 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது.
Related Tags :
Next Story