நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இரவு வரை நீடித்த மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு


நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இரவு வரை நீடித்த மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு
x

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இரவு வரை மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நீடித்தது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில், மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இளங்கலை, இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வில் முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு நடந்தது.

நேற்று வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் காலை 10 மணி அளவில் தொடங்கிய கலந்தாய்வு இரவு 8 மணி வரை நீடித்தது. எனவே மாணவிகளின் பெற்றோர் கடும் அவதி அடைந்தனர். மேலும் கலந்தாய்வை மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலந்தாய்வை முடித்து கொண்ட பேராசிரியைகள் பெற்றோரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுவரை நடந்த கலந்தாய்வில் சுமார் 600 மாணவிகளுக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டு இருப்பதாக பேராசிரியைகள் தெரிவித்தனர். இன்று (வியாழக்கிழமை) தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடக்கிறது.


Next Story