கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
கூடலூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் அருள் மேற்பார்வையில் கூடலூர் அருகே நியூஹோப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார் சூண்டி பகுதியில் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது சுப்பிரமணி என்ற மணிவேல் (வயது 50) என்பவரது வீட்டில் 30 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story