ஆசிரியர்களுக்கு 'எண்ணும், எழுத்தும்' பயிற்சி முகாம்


ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம்
x

ஆலங்காயத்தில் ஆசிரியர்களுக்கு ‘எண்ணும், எழுத்தும்’ பயிற்சி முகாம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வள மைய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துகின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய எண்ணும், எழுத்தும் என்ற தலைப்பில் 5 நாள் பயிற்சி முகாம் ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

பயிற்சி முகாமில் ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சி முகாமை திருப்பத்தூர் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டார். அப்போது ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அவர், பயிற்சியை முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார்.

இதில் ஆலங்காயம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சித்ரா மற்றும் கமலநாதன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மலையன் மற்றும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கும் 12 கருத்தாளர்கள் உடனிருந்தனர்.


Next Story