தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
நொய்யல்,
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் கரூர் வட்டார வள மையம் சார்பில் கரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் கடந்த 6-ந்தேதி முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் முருகபாண்டி மற்றும் பெரியசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கொரோனா காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிறைவு செய்யும் பொருட்டு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்களை வளர்க்கும் பொருட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை இணை இயக்குனர் ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், உதவி திட்ட அலுவலர் சக்திவேல், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பயிற்சி இன்றும் நடக்கிறது.