நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு காயம்
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு காயம்
நீலகிரி
குன்னூர், ஜூன்.9-
குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ஆஸ்பத்திரி சேரி குடியிருப்பை சேர்ந்தவர் ஆபி. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது மாடுகளை நேற்று குடியிருப்பு பகுதி அருகில் நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, மாலை 5.30 மணியளவில் அந்த பகுதியில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது.
இதையடுத்து ஆபி மற்றும் பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பசுமாடு நாட்டு வெடிகுண்டை (அவுட்டுக்காய்) கடித்ததால் அது வெடித்து மாட்டின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக புல்வெளி பகுதியில் நாட்டு வெடிகுண்டை மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story