நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்
திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம் உணவு என நினைத்து கடித்ததால் விபரீதம்
விழுப்புரம்
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், அம்பிகா ஆகியோரின் பசுமாடுகள் ஏரியில் இரை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்தனர். அப்போது ஒரு பாசுமாட்டின் வாய், கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. விசாரணையில் அப்பகுதியில் மர்மநபர்கள் காட்டு பன்றியை கொல்வதற்காக வைத்திருந்த கண்ணி வெடியை பசுமாடு ஏதோ உணவு என்று நினைத்து அதை கடித்தபோது குண்டு வெடித்து படுகாயம் அடைந்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவலறிந்த ரோசணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி கண்ணி வெடியை வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story