நாட்டு நலப்பணித்திட்ட முகாம்


நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
x

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் முன்னிலை வகித்தார். கூரைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவி செல்வி தலைமை தாங்கினார். தொடர்ந்து அங்குள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தினை அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணம்மாள், மாரிக்கனி, அலுவலக மேலாளர் கருணாநிதி, பயிற்சி அலுவலர் ரெகுராஜ் மற்றும் பயிற்சியாளர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story