நாட்டு நலப்பணி திட்ட முகாம்
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா வழிகாட்டுதலின் படி பாரதி மூலங்குடி ஊராட்சி புனவாசல் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கஸ்தூர்பாகாந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திர முருகப்பன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் முருகப்பன், செயலாளர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதல்வர் மலர்விழி இன்பராஜ் வரவேற்றார். இலவச சித்த மருத்துவ முகாமினை பாரதி மூலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி ஜோதிபாசு தொடங்கி வைத்தார். திருவாரூர் மாருதி சித்தா கிளினிக் டாக்டர் இளங்கோ 250 பேருக்கு சோதனை செய்து இலவசமாக மருந்துகள் வழங்கினார். இதில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், கல்வி நிறுவனங்களின் நிர்வாக மேலாளர் சின்னராஜ், புனவாசல் தலைமை ஆசிரியர் பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட அலுவலர் வீரமணி நன்றி கூறினார்.