சங்கராபுரம் அருகே ஆசிரியையை தாக்கிய தம்பதி கைது
சங்கராபுரம் அருகே ஆசிரியையை தாக்கிய தம்பதி கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி உஷா (வயது 36). இவர் சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த பிரபு மனைவி கலைச்செல்வி (33) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று உஷா பள்ளியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த கலைச்செல்வி, இவருடைய கணவர் பிரபு, கலைச்செல்வியின் தாய் ஜெயக்கொடி ஆகியோர் உஷாவிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயக்கொடி உள்பட 3 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, கலைச்செல்வி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story