மருத்துவக் கல்லூரியை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.25 கோடி மோசடி செய்த தம்பதி கைது


மருத்துவக் கல்லூரியை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.25 கோடி மோசடி செய்த தம்பதி கைது
x

மருத்துவக் கல்லூரியை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.25 கோடி மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

மருத்துவக் கல்லூரியை வாங்கித் தருவதாகவும், கடன் பெற்று தருவதாகவும் கூறி வெவ்வேறு நபர்களிடம் 1 கோடியே 25 லட்ச ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த உமர் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ஜெயசீலன் என்பவரும் அவருடைய மனைவி ராமலட்சுமியும் தொழிலை மேம்படுத்த ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் இருந்து ரூ.50 லட்சத்தை பெற்று ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருநெல்வேலி பகுதியில் தலைமறைவாகியிருந்த ஜெயசீலன், ராமலட்சுமி தம்பதியை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, மருத்துவக் கல்லூரியை வாங்கித் தருவதாக கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.75 லட்சம் வாங்கி ஏமாற்றியதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.


Next Story