தடுப்புச்சுவரில் கார் மோதி தம்பதி காயம்


தடுப்புச்சுவரில் கார் மோதி தம்பதி காயம்
x

பாவூர்சத்திரத்தில் தடுப்புச்சுவரில் கார் மோதி தம்பதி காயம் அடைந்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வேல்சாமி மகன் மகேஷ்வரன் (வயது 38). இவர் தனது மனைவி சுமதி (35) மற்றும் 2 குழந்தைகள், சுமதியின் தங்கை ஆகியோருடன் நேற்று குற்றாலம் சென்றார். அங்கு அருவிகளில் குளித்து விட்டு காரில் ஊருக்கு புறப்பட்டனர்.

பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகே வந்தபோது, சாலையின் நடுவே அமைந்துள்ள தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகேஷ்வரன், சுமதி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story