சேலம் வழியாக செல்லும் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சேலம் வழியாக செல்லும் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
சேலம்
சூரமங்கலம்:
கோவையில் இருந்து சேலம் வழியாக செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22616) இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து, சேலம் வழியாக திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் திருப்பதி- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22615) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தற்போது 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் மூன்று கூடுதலாக இணைத்துள்ளது. அதன்படி ஒரு ஏ.சி., சேர் கார் பெட்டி, 2-ம் வகுப்பு பெட்டி, பொதுப்பெட்டி, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக சேலம் ெரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story