மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

திருச்சி வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வடிவேலை அடித்து கொடுமைப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும். பழனி வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் மீது ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி என மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டதாக கூட்டுக்குழுவின் துணை தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story