தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டுகளில் குடியரசு தின விழா


தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டுகளில் குடியரசு தின விழா
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டுகளில் குடியரசு தின விழாவையொட்டி நீதிபதிகள் கொடியேற்றினர்.

மாவட்ட முதன்மை நீதிபதி

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா வரவேற்று பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி ராஜா, முதன்மை சார்பு நீதிபதி கோகுல கிருஷ்ணன், முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கணேசன், வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

மாநில நீதித்துறை அகாடமி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் சார்பில் சட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் கட்டுரை போட்டியில் தர்மபுரி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 3-வது இடமும் பெற்ற சட்ட கல்லூரி மாணவி அபிதா, பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சட்ட கல்லூரி மாணவர் சபரிநாதன் உள்பட போட்டிகளில் வெற்றி பெற்ற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 28 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நீதிபதி கலைவாணி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். மேலும் மரக்கன்றுகளை நட்டார்.

இதில் பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்க தலைவர் அருணகிரி, செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட வக்கீல்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story