பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை கடிதம் மூலம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது: சிவி சண்முகம்
பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை கடிதம் மூலம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சிவி சண்முகம் கூறினார்.
தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவி சண்முகம், பொதுக்குழுவில் யார் பெரும்பான்மை வாக்குகளை பெறுகிறாரோ அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார். இருதரப்பும் கையெழுத்து போடுவது சாத்தியமல்லாதது. தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை கடிதம் மூலம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கூறினார்.
Next Story