கோர்ட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோர்ட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பரிமளா முன்னிலை வகித்தார். செயலாளர் தனேஷ் குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் ஆள்சேர்ப்பு அறிக்கையால் இரவு நேர காவலர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்பட பலர் பாதிப்படைகின்றனர். எனவே ஆள்சேர்ப்பு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். தற்காலிகமாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story