அ.தி.மு.க. பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க. பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு
x

கோத்தகிரி அ.தி.மு.க. பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி

ஊட்டி

கோத்தகிரி அ.தி.மு.க. பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. பிரமுகர்

கோத்தகிரி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்டது ஓரசோலை பூபதி நகர். இந்த கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ள பூபதியூர் கிராமத்திற்கு ஊராட்சி சார்பில் செங்குத்தான காங்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக நடந்து செல்லவும், குறிப்பாக நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் சடலங்களை சுமந்து கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

எனவே அருகாமையில் 59¼ சென்ட் இடம் உள்ள மற்றொரு பாதையை கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பாதை தனக்கு சொந்தமானது என்று கூறி, அ.தி.மு.க. பிரமுகரான வடிவேல் என்பவர் தடுப்புச்சுவர் கட்ட முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே வடிவேல் அந்த பகுதி மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

இதுகுறித்து பூபதி நகர் மக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அங்கு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பூபதி நகர் பொதுமக்கள் ஊர் தலைவர் மாகாளி தலைமையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குறித்து அவதூறாக பேசிய வடிவேலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி முருகன், அ.தி.மு.க. பிரமுகர் வடிவேல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தார். அ.தி.மு.க. பிரமுகரான வடிவேலின் மனைவி கோத்தகிரி பேரூராட்சியில் கவுன்சிலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story