குரூப்1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


குரூப்1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க ஐகோர்ட்டு  உத்தரவு
x

மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

மதுரை,

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்டது.இந்த நிலையில் குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணகுமார் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story