டிசம்பர் 31-ந் தேதி வரை கோர்ட்டு அனுமதிகனி மார்க்கெட்டில் தற்காலிககடைகள் அமைப்பதில் சிக்கல்


டிசம்பர் 31-ந் தேதி வரை கோர்ட்டு அனுமதிகனி மார்க்கெட்டில் தற்காலிககடைகள் அமைப்பதில் சிக்கல்
x

டிசம்பர் 31-ந் தேதி வரை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதாவ் கனி மார்க்கெட்டில் தற்காலிக கடைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

ஈரோடு

ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி, ஆடைகளை விற்க 1983-ம் ஆண்டு அப்போதைய ஈரோடு நகராட்சி மூலம் பன்னீர்செல்வம் பூங்கா அருகே சந்தை தொடங்கப்பட்டது. முன்னாள் நகர்மன்ற தலைவராக இருந்த அப்துல்கனி பெயரில் தொடங்கப்பட்டது. கனி மார்க்கெட் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த சந்தை, ஜவுளி விற்பனைக்கு என்றே பிரத்தியேகமாக செயல்படும் மிகப்பழமையான சந்தையாகும். இங்கு தினசரி 200-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை சந்தை நாட்களாகும்.

இந்த நாட்களில் ஈரோடு மட்டுமின்றி திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல், வெள்ளக்கோவில், திருப்பூர் என ஈரோட்டை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜவுளி மற்றும் பனியன் உற்பத்தியாளர்கள் கனி மார்க்கெட்டில் குவிந்து வந்தனர். இங்கு ஜவுளிகள் வாங்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து சென்றார்கள்.

புதிய வளாகம்

வாரந்தோறும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கடை அமைத்து வருகிறார்கள். சிறு வியாபாரிகள் ஏராளமானவர்கள் இங்கு வந்து ஜவுளி வாங்கிசெல்கிறார்கள். ஏழை, எளியவர்கள் பண்டிகை காலங்களில் தங்கள் வருவாய்க்கு ஏற்ற உடைகள் வாங்க சிறந்த இடமாக இது இருந்தது.

இந்த நிலையில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையின் தரத்தை உயர்த்தும் வகையில் சுமார் ரூ.50 கோடி செலவில் பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது.

வழக்கு

இந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெறும்போது, ஏற்கனவே கடை அமைத்திருந்த வியாபாரிகளுக்கு அந்த வளாகத்திலேயே தற்காலிக கடைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. புதிய வணிக வளாக கட்டிடம் திறந்தபோது, பழைய வியாபாரிகள் தங்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய கட்டண விகிதங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த தொகை கூடுதலாக இருப்பதாக கூறி வியாபாரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வியாபாரிகள் உடனடியாக கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வந்தது.

டிசம்பர் 31 வரை அனுமதி

இதைத்தொடர்ந்து மீண்டும் வியாபாரிகள் மேல் முறையீடு செய்தனர். 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை விசாரித்து, வியாபாரிகள் வருகிற டிசம்பர் 31-ந் தேதிவரை அதே இடத்தில் கடைகள் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக இந்த வாய்ப்பினை கோர்ட்டு வழங்கி உள்ளது.

இது தொடர்பாக வியாபாரிகள் சற்று ஆறுதல் அடைந்தாலும் தங்கள் எதிர்காலத்தை எண்ணி கலக்கத்தில் உள்ளனர். கடைகள் அமைப்பதில் உள்ள சிக்கலால் ஜவுளி வியாபாரத்தையே நம்பி இருக்கும் வியாபாரிகள் தவித்து வருவதுடன், பெருமை மிகு ஜவுளி சந்தையும் தனது பாரம்பரியத்தை இழக்கும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவின் படி புதிய தற்காலிக கடைகள் அமைக்க, பழைய கடைகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story