தமிழ்நாட்டில் 2 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 2 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படுவதில்லை. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தலா ஒரு ஆணுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதேபோல, மற்ற 36 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7-ஆக உள்ளது. இதைபோல, தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.


Related Tags :
Next Story