பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.20 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை


பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.20 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
x

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.20 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.20 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

பழையகோட்டை

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவை ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.20 லட்சத்துக்கு விற்பனை

இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 75 மாடுகளில் 51 மாடுகள் ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் ரேக்ளா, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் பால் உற்பத்திக்காகவும், விவசாயிகள் வளர்க்கும் ஆர்வம் காரணமாகவும் வழக்கத்தை விட பசுமாடுகள், இளங்கன்றுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.


Related Tags :
Next Story