வீரமுனியாண்டவர் கோவில் சந்தனக்காப்பு விழாவையொட்டி மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி அருகே வீரமுனியாண்டவர் கோவில் சந்தனக்காப்பு விழாவையொட்டி மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி அருகே எட்டியத்தளி கிராமத்தில் வீரமுனியாண்டவர் கோவில் சந்தனக்காப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பெரியமாடு, பூஞ்சிட்டு மாடு என இரு பிரிவுகளாகவும், குதிரை வண்டி பந்தயத்தில், பெரிய குதிரை, நடுகுதிரை என இரு பிரிவாக போட்டி நடைபெற்றது.
போட்டியில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடு மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பெரியமாடு பிரிவில் 16 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 29 மாட்டு வண்டிகளும் என மொத்தம் 45 மாட்டு வண்டிகளும், 37 குதிரை வண்டிகளும் போட்டியில் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
இதையடுத்து, வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.