மின்னல் தாக்கி பசு-கன்று சாவு
மின்னல் தாக்கி பசு-கன்று இறந்தது.
தோகைமலை, -
தோகைமலை அருகே ஆர்டிமலை ஊராட்சி புதுப்பட்டி வேங்கைநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவருக்கு சொந்தமான பசு மற்றும் கன்றுக்குட்டி வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தடியில் கட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பசு, கன்றுக்குட்டி பரிதாபமாக இறந்தது. இதைக்கண்ட ெபருமாளின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிமலை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ராமதாஸ், உதவியாளர் வடிவேலு ஆகியோர் வந்து பார்வையிட்டு, பெருமாளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்த பசு, கன்றுக்குட்டிக்கு பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் பசு, கன்றுக்குட்டிக்கு உரிய காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.