எட்டயபுரத்தில் மாட்டு வண்டி போட்டி


எட்டயபுரத்தில் மாட்டு வண்டி போட்டி
x

எட்டயபுரத்தில் மாட்டு வண்டி போட்டி நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி விளாத்திகுளம் சாலையில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. போட்டியில் மொத்தம் 33 பூஞ்சிட்டு ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். போட்டியானது 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தது. இதில் முதலாவதாக புதூர் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரது மாடும், 2-வதாக முடுக்குமீண்டான் பட்டியைச் சேர்ந்த பொன் வீரன் என்பவரது மாடும், 3-வதாக குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரது மாடும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மற்றொரு பிரிவில் சண்முகபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மாடும், 2-வதாக சந்திரகிரியைச் சேர்ந்த லிங்கம் என்பவரது மாடும், 3-வதாக மேல்மாந்தையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மாடும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இன்று காலையில் (ஞாயிற்றுக்கிழமை) சின்னமாடு, பெரிய மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற உள்ளது.


Next Story