கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு


கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு
x

நாகையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை புதிய நம்பியார் நகர் பகுதியில் மாடுகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அதில் ஒரு பசு மாடு ஆல்வின் என்பவரது வீட்டின் பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள கழிவுநீர் தொட்டியை(செப்டிக் டேங்கை) பசுமாடு கடந்து சென்ற போது எதிர்பாராவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது.கழிவுநீர் தொட்டியில் மூடப்பட்டிருந்த சிமெண்டு காரைகள் சேதமடைந்து இருந்ததால், பசுமாடு அதை கடக்க முயன்றபோது உள்ளே தவறி விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம் தலைமையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து, நீண்ட நேர போராட்டத்துக்கு பின்

பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.நாகை புதிய நம்பியார் நகர் பகுதியில் சுனாமி குடியிருப்புகளில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. அதேபோல வீட்டின் ஓரத்தில் உள்ள செப்டிக் டேங்குகளும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. எனவே மிகப்பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு நாகை புதிய நம்பியார் நகரில் சேதமடைந்த சுனாமி குடியிருப்பு வீடுகளையும், செப்டிக் டேங்குகளையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story