கந்துவட்டிக்காக பசு மாட்டை பிடித்து சென்றனர் - தந்தை , மகன் மீது வழக்கு


கந்துவட்டிக்காக பசு மாட்டை பிடித்து சென்றனர் - தந்தை , மகன் மீது வழக்கு
x

கந்துவட்டிக்காக பசு மாட்டை பிடித்து சென்ற தந்தை -மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

மதுரை

பேரையூர்,

உசிலம்பட்டி தாலுகா அல்லிகுண்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி பஞ்சவர்ணம் (வயது 37). இவர் அதே ஊரைச் சேர்ந்த சிவனாண்டி என்பவரிடம் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ரூ.28 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி அதற்கு முறையான வட்டி கட்டி வந்துள்ளார்.கடந்த 2 மாதங்களாக வட்டி கட்ட முடியாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சவர்ணம் வீட்டுக்கு சென்ற சிவனாண்டி பணத்தை கேட்டுள்ளார்.பணத்தை பஞ்சவர்ணத்தால் கொடுக்க முடியாத நிலையில், அவருடைய பசுமாட்டை பிடித்து சென்றுள்ளார்.அதை தடுத்த பஞ்சவர்ணத்தை சாதி சொல்லி திட்டியும், அடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிவனாண்டி மகன் முனியாண்டி வட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதுகுறித்து பஞ்சவர்ணம் சேடபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சிவனாண்டி, அவருடைய மகன் முனியாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story