வேடசந்தூர் அருகே 2 பசுமாடுகள் திருட்டு


வேடசந்தூர் அருகே 2 பசுமாடுகள் திருட்டு
x

வேடசந்தூர் அருகே 2 பசுமாடுகள் திருடுபோயின.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 23). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம், மண்டபம்புதூர் சாலையில் உள்ளது. அங்கு ெதாழுவம் அமைத்து பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று தொழுவத்தில் கட்டியிருந்த 2 பசுமாடுகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இதற்கிடையே தோட்டத்திற்கு வந்த அய்யப்பன், பசுமாடுகள் மாயமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story