திருப்பத்தூரில் மாடுகள் தொல்லை


திருப்பத்தூரில் மாடுகள் தொல்லை
x

திருப்பத்தூரில் மாடுகள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. ஒருசில மாடுகள் சாலையோரம் படுத்துக் கொள்கின்றன. அந்த வழியாக இரவில் வாகனங்களில் வேகமாக வருவோர் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள்.

மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story