கால்நடைகள் கோசாலையில் அடைப்பு


கால்நடைகள் கோசாலையில் அடைப்பு
x

சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகள் கோசாலையில் அடைக்கப்பட்டன.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகள் கோசாலையில் அடைக்கப்பட்டன.

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, மயிலாடுதுறை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, வடக்குவீதி, பிடாரி வடக்கு வீதி, ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, ெரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, தாடாளன் கோவில், ெரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தன.

இந்த மாடுகள் சாலையில் செல்வோரை முட்டித்தள்ளுவது, வாகனங்களின் குறுக்கே ஓடுவது போன்றவற்றால் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்தித்தனர்.

கோசாலையில் அடைப்பு

இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் நேற்று சீர்காழி நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகளை நகராட்சி பணியாளர் உதவியோடு பிடித்து மாடுகளை நகராட்சி வளாகத்துக்குள் கொண்டு வந்து அங்கிருந்து சரக்கு வாகனத்தில் மாடுகளை ஏற்றி கோசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க நடவடிக்கை எடுத்த நகர் மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி பணியாளர்கள் மற்றும் இது குறித்த செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story