போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகள்


போக்குவரத்துக்கு இடையூறாக  திரியும் கால்நடைகள்
x

சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, மயிலாடுதுறை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, வடக்குவீதி, பிடாரி வடக்கு வீதி, ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, ெரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, தாடாளன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திாிகின்றன.

விபத்து

குறிப்பாக மாடுகள் சாலையில் செல்வோரை முட்டி கீழே தள்ளுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பாக இரவில் சாலையில் படுத்து கிடக்கும் கால்நடைகள் மீது இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மோதி கீேழ விழுந்து காயமடைகிறார்கள். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் சுற்றுத்திரியும் கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் கால்நடைகளை சாலையில் திரிய விடும் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்்கை விடுத்துள்ளனா்.


Next Story