இரவில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள்


இரவில் போக்குவரத்துக்கு   இடையூறாக திரியும் மாடுகள்
x

லெட்சுமாங்குடி சாலையில் இரவில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

லெட்சுமாங்குடி சாலையில் இரவில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் திரியும் மாடுகள்

கூத்தாநல்லூரில் உள்ள, லெட்சுமாங்குடி சாலை திருவாரூர் -மன்னார்குடி வழித்தடத்தில் அமைந்துள்ள பிரதான சாலையாகும். இந்த சாலையில் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் போன்ற பல நகர பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தினமும் சென்று வருகின்றன.மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையாகவும் இந்த சாலை இருந்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையிலேயே நிற்பதும், படுப்பதுமாக இருந்து வருகிறது.

விபத்துகள்

பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் மாடுகள், வாகனங்கள் வரும் போது திடீரென துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் வாகனத்தை வேறுபக்கத்துக்கு திருப்ப முயலும் போது விபத்துகள் ஏற்படுகிறது.மேலும், இரவு நேரங்களில் இந்த சாலையில் சென்னை செல்லக்கூடிய பஸ்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களைஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சம் அடைகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story