தீவனம் கிடைக்காமல் சுற்றி திரியும் மாடுகள்
வெம்பக்கோட்டை பகுதிகளில் தீவனம் கிடைக்காமல் மாடுகள் சுற்றித்திரிகின்றன.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் தீவனம் கிடைக்காமல் மாடுகள் சுற்றித்திரிகின்றன.
கால்நடை வளர்ப்பு
வெம்பக்கோட்டை ஒன்றியம் பூசாரிநாயக்கன்பட்டி, சேதுராமலிங்கபுரம், துலுக்கன்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை, கொட்ட மடக்கிபட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, பனையடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பேர் கால்நடைகளை வளர்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாைய கொண்டு தான் குடும்பம் நடத்துகின்றனர்.
இந்தநிலையில் இந்த பகுதியில் கால்நடை தீவனமான சோளக்கதிர் போதிய அளவு விளைச்சல் செய்யவில்லை. தற்போது சோளம் ஒரு கட்டு ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தண்ணீர் தொட்டி
ஆதலால் பணம் கொடுத்து தீவனம் வாங்கி கொடுக்க முடியாமல் கால்நடை வளர்ப்பவர்கள் ெபரிதும் சிரமப்படுகின்றனர்.
இதனால் ஆடு, மாடுகள் உணவுகளை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் சாலையில் கிடக்கும் குப்பைகளை கூட உணவாக உட்கொள்ளும் நிலை உள்ளது. ஆதலால் கால்நடைகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவை காட்சி பொருளாக காலியாக உள்ளது.
நடவடிக்ைக
இதனால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமலும், தீவனம் கிடைக்காமலும் கால்நடைகள் வெயிலில் சுற்றி திரிகின்றன.
ஆதலால் அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி திறக்கவும், தீவனம் விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.