போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
x

திருவண்ணாமலை நகரில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

தமிழகத்தில் தற்போது வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக திருவண்ணாமலை நகரமும் ஒன்றாக உள்ளது. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் இருசக்கர மோட்டார் சைக்கிள்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் திருவண்ணாமலை நகர பகுதியில் கடந்த சில தினங்களாக வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய பகுதிகளான போளூர் சாலை, பஸ் நிலைய பகுதி, தேரடி வீதி, திருவூடல் தெரு, தண்டராம்பட்டு சாலை, செங்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவு அவதிக்கு உள்ளாகின்றனர். சாலையில் நின்று கொண்டிருக்கும் மாடுகள் திடீரென அங்கும், இங்கும் ஓடுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சில சமயங்களில் அதிர்ச்சிக்கு உள்ளாகி சாலையோரம் உள்ள சுவரிலோ அல்லது சாலையில் செல்லும் மற்றவர்கள் மீது மோதுவது போன்று செல்கின்றனர். இதனால் சில சமயங்கள் விபத்துகளும் ஏற்படுகின்றது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மாடுகளை வளர்ப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக கட்டி வைத்து வளர்க்க வேண்டும். உத்தரவை மீறி சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விற்பனை செய்வதோடு, சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சமீபத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்கள் அதனை கண்டு கொள்வது இல்லை. உயிர் சேதம் போன்ற பெரிய அளவிலான சம்பவங்கள் நடைபெற்றால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும் மவுனமாக உள்ளனர். எனவே பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story