கிழக்கு கடற்கரை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
சேதுபாவாசத்திரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் கொள்ளுக்காடு தொடங்கி கட்டுமாவடி வரையிலும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகிறது. கடற்கரை ஓரங்களில் உள்ள பொதுமக்கள் யாரும் மாடுகளை கட்டுவது கிடையாது. பகல் நேரங்களில் கடற்கரை ஓரங்களில் மேய்ந்து திரியும் மாடுகள் மாலை 6 மணிக்கு மேல் சாலைகளில் தஞ்சமடைகிறது. இரவு 10 மணிக்கு சாலையின் நடுவில் மாடுகள் படுத்துவிடுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் விரைவு பஸ், சுற்றுலா பஸ், கார்கள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உரிமையாளர்கள் அவரவர் வீடுகளில் கட்டினால் தான் விபத்துகளை தடுக்கமுடியும். எனவே அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய அறிவிப்பு வெளியிட்டால் தான் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் கூறினா்.