அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்டு
அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் காசிஅருள் ஒளி, மாவட்ட குழுவை சேர்ந்த வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பருவம் தவறிபெய்த மழையினால் வேதாரண்யம் தாலுகாவில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிர் பாதிப்பு அடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தகட்டூர் கடைத்தெருவில் வருகிற 18-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது ன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.