உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல்


உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே அனுமன் தீர்த்தம் உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே அனுமன் தீர்த்தம் உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்மட்ட மேம்பாலம்

ஊத்தங்கரை அருகே அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் புகழ்பெற்ற அனுமந்தீஸ்வரர் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். அதேபோல பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சேலம்-வேலூர் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார், வேன், பஸ்கள், கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக செல்கின்றன.

கடந்த 2012-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஒரு பாலமும், கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்ட ஒரு பாலமும் என 2 உயர்மட்ட மேம்பாலங்கள் உள்ளன. ஆரம்பத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைமட்ட பாலம் மட்டுமே இருந்த காரணத்தினால், ஏராளமான உயிர் சேதங்களும், கால்நடைகளும் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

விரிசல்

தற்போது இந்த மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது மேம்பாலமே அதிர்கிறது. உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமே பாலத்தில் விரிசல் இருப்பது தெரியும் என்பதால், அவ்வழியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பாலத்தில் விரிசல் உள்ளது தெரியாததால், வாகனங்களில் வேகமாக சென்று வருகின்றனர்.

இதனால் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு விரிசல் ஏற்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story