குட்டையில் மீன் பிடிக்க சென்றபோது வெடிப்பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்


குட்டையில் மீன் பிடிக்க சென்றபோது வெடிப்பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 2:32 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே உள்ள பூனையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருடைய நண்பர் சண்முகம் (40). இவர் 2 பேரும் நேற்று கூட்டாறு மாரியம்மன் கோவில் அருகே உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றனர். அங்கு அவர்கள் வெடிப்பொருளான ஜெலட்டின் குச்சியை பயன்படுத்தி மீன் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஜெலட்டின் குச்சி வெடித்ததில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story