தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற 132 பேர் விண்ணப்பம்
தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற 132 பேர் விண்ணப்பம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மாநகர போலீஸ் எல்லை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை நடத்த தனித்தனியே விண்ணப்பம் பெறப்பட்டது. ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 30-ந் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. கட்டிட வரைபடம், பட்டா, சிட்டா, உரிமக்கட்டணம் செலுத்திய ரசீது, கட்டிடத்தின் சொத்துவரி ரசீது, வாடகை ஒப்பந்தம், போட்டோ, முகவரி ஆதாரத்துடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தனர்.
விண்ணப்ப அவகாசம் முடிந்து தற்போது விண்ணப்பம் பரிசீலனை நடக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசுக்கடை உரிமம் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கேரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட எல்லைப்பகுதியில் பல்லடம்-31, அவினாசி, உடுமலை தலா-22, திருப்பூர் தெற்கு-14, தாராபுரம்-13, ஊத்துக்குளி-12, காங்கயம்-11, மடத்துக்குளம்-7 விண்ணப்பங்கள் என மொத்தம் 132 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பரிசீலனைக்கு பிறகு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.