பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காத பட்டாசு கடைக்கு சீல்
நாட்டறம்பள்ளி அருகே உரிய பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காத பட்டாசு கடைக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே உரிய பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காத பட்டாசு கடைக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
நாட்டறம்பள்ளி அடுத்த பெத்தகல்லப்பள்ளி ஊராட்சி புத்துக்கோயில் கிராமத்தில் ராஜாமணி என்பவரது மகன் மோகன் பட்டாசு கடை நடத்தி வருகிறார். அந்த பட்டாசு கடை உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றமால் பட்டாசு கடை இயங்கி வருவதாக திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ராஜேஷ் மற்றும் வருவாய் துறையினருடன் அவர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பட்டாசு கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டாசு கடை உரிய நடைமுறைகளை பின்பற்றப்படாமல் கடையின் உள்பகுதியில் மின்சார உபகரணங்கள் வைத்து இருந்தனர். பொது மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் பட்டாசு கடைக்கு சீல் ஆய்வில் தெரிய வந்தது இதனையடுத்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி வைக்க உத்தரவிட்டார் இதனையடுத்து வருவாய் துறையினர் பட்டாசு கடைக்கு 'சீல்' வைத்தனர்.