மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி


மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி
x

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது முன்னிலை வகித்தனர். 21 மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சம் கடனுதவி காசோலையாக வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து சாலையோர சிறு,குறு வியாபாரிகள் 10 பேருக்கு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் பரிந்துரையின் கீழ் வழங்கப்பட்டது. மேலும் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு இ-சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.


Next Story