முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு


முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு
x

தஞ்சையில் நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும் என தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும் என தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கோப்பை போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், வாலிபால், மேசைபந்து, டென்னிஸ், பளுதூக்குதல், பீச் வாலிபால் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 50 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றனர். இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

கிரிக்கெட் சேர்ப்பு

இந்தநிலையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் கலந்து கொள்ளும் வகையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுப்பிரிவினர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கலாம்.எனவே முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மற்றும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியில் பதிவு செய்து தஞ்சை மாவட்ட வீரர், வீராங்கனைகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பதிவு செய்வதற்கான கடைசி நாள் வருகிற 23-ந் தேதி ஆகும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story