மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
சிவகங்கை
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அடுத்த கே.நெற்புகப்பட்டி கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி வழங்கினார். 2-வது பரிசாக ரூ.20 ஆயிரத்தை பொறியாளர் அணி அமைப்பாளரும், தி.சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவருமான முருகப்பன் வழங்கினார். 3-வது பரிசாக ரூ.15 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சூரக்குடி பழனியப்பன், இளைஞரணி கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கே.நெற்புகப்பட்டி கிளை செயலாளர் ஆர்.பழனியப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story