கிரிக்கெட் போட்டி


கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூரில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி ரெட் கில்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நாலாட்டின்புத்தூர் நேஷனல் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள சன்டே கிளப் மைதானத்தில் 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று நடந்த போட்டியை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் கோவில்பட்டி சந்தனமாரியப்பன், முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கோவில்பட்டி வட்ட அளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளது.

வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக ரூ.7 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.1,500-ம் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்படுகிறது. இறுதிப்போட்டி 2-வது நாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.


Next Story