கோவில்பட்டியில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
கோவில்பட்டியில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள படர்ந்தபுளி டி.பி லெவன் ஸ்டார் அணி சார்பில் 5-வது ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 16 அணிகள் பங்கு பெற்றது. ஒவ்வொரு அணிக்கும் தலா 8 ஓவர் நிர்ணயிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் படர்ந்தபுளி டி.பி லெவன் ஸ்டார் அணியும், கடலையூர் ரைடன் லைசன்ஸ் அணியும் மோதியது. இதில் 8 ஓவர் முடிவில் கடலையூர் ரைடன் லைசன்ஸ் அணி 66 ரன்கள் எடுத்தனர். அடுத்து பேட் செய்த படர்ந்தபுளி டி.பி லெவன் ஸ்டார் அணி 6 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முதல் பரிசாக ரூ.12,001-ஐ படர்ந்தபுளி டி.பி. லெவன் ஸ்டார் அணிக்கு வழங்கினார். கடலையூர் அணிக்கு 2-ம் பரிசாக ரூ.7,001 ஐயும், கோவில்பட்டி கிரிக்கெட் அணிக்கு 3-ம் பரிசாக ரூ.4,001 ஐ வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.