முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி


முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி
x

காட்டுச்சேரியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை விளையாட்டு துறை திருச்சி மண்டல முதன்மை மேலாளர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

காட்டுச்சேரியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை விளையாட்டு துறை திருச்சி மண்டல முதன்மை மேலாளர் தொடங்கி வைத்தார்.

கிரிக்கெட் போட்டி

மயிலாடுதுறை மாவட்ட, அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி பொறையாறு அருகே காட்டுச்சேரியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசினர் மாவட்ட சிறு விளையாட்டு அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அப்துல்லாஷா தலைமை தாங்கினார். மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ஆனந்து முன்னிலை வகித்தனார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை திருச்சி மண்டல முதன்மை மேலாளர் பியூலாகேன் சுசீலா தொடங்கி வைத்தார்.

கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 ஓவர் கொண்ட போட்டியில்் பொறையாறு டி.பி. எம்.எல். கல்லூரி முதல் இடத்தையும், மணல்மேடு அரசினர் கலைக்கல்லூரி 2-ம் இடத்தையும், மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி.கலைக்கல்லூரி 3-ம் இடத்தையும் பெற்றது.

முறையே மூன்று கல்லூரியை சேர்ந்த சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட கிரிகெட் அணி உருவாக்கப்பட்டு இவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் விளையாடுவர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுதாகர், செந்தில், ஷாஜகான், கேர் டேக்கர் மற்றும் பலர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story