முக்கூடலில் கிரிக்கெட் போட்டி - சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
முக்கூடலில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
முக்கூடல்,
முக்கூடலில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முக்கூடல் பேரூர் கழக சார்பில் G.V. கண்ணனின் காமராஜர் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இப்போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கிவைத்தார். அதற்கு முன்னதாக முக்கூடல் நகர தி.மு.க., செயலாளர் இரா.லெட்சுமணன் வரவேற்புரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சார்ந்த வேதமூர்த்தி கலந்துக்கொண்டு பேசியதாவது,
நான் கிரிக்கெட் விளையாட்டுக்களை தொலைக்காட்சிகளில் தான் பார்த்துள்ளேன். ஆனால் நான் பிறந்த மண்ணில் மின்னொளி விளையாட்டு மைதானத்தையும் இப்படியொரு விளையாட்டு வீரர்களையும் நேரில் காண்பது மகிழ்ச்சி . மேலும் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதனை தொடர்ந்து, போட்டியை தொடங்கிவைத்த சபாநாயகர் அப்பாவு பேசியதாவது,
கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த காமராஜர் கிரிக்கெட் கிளப் நடத்தும் கிரிக்கெட் போட்டியில் நான் கலந்து கொள்ளும்போது எனக்கு ஒரு விசயம் ஞாபகத்தில் வருகிறது. நம் முன்னால் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்று ஒன்று உண்டு என்றால் கிரிக்கெட் தான்.
அதேபோல் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எல்லாவிதமான விளையாட்டுக்களிலும் மிகவும் ஆர்வம் உள்ளவர்.
அதேபோல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவ / மாணவிகளிடமும் அந்த ஆர்வத்தை பதிவு செய்யும் விதமாக சென்னையில் காமராஜர் பெயரில் ரூ 1,000 கோடி மதிப்பிலான உலகத்தரம் வாய்ந்த மிக பிரம்மாண்டமான விளையாட்டு மைதானம் ஒன்று உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்ததோடு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார்.
இப்போட்டியில் பல பகுயில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர், அதனைத் தொடர்ந்து இப்போட்டியில் வெற்றிப் பெரும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரொக்கப் பணம் ரூ 50, 000 மும், 2வது பரிசு ரூ 40,000 மும், 3வது பரிசாக ரூ 30000 மும், 4வது பரிசாக ரூ20,000 மும், 5வது பரிசாக ரூ10,000 மும் , 6வது பரிசு முதல் 9வது வரை ரூ 5,000 வரை வழங்கபட உள்ளது.