கோவில்பட்டி அருகே கிரிக்கெட் போட்டி


கோவில்பட்டி அருகே கிரிக்கெட் போட்டி
x

கோவில்பட்டி அருகே கிரிக்கெட் போட்டி நடந்தது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே குருமலை புதூரில் தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் ஊர் மக்கள் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடந்தது. போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில்லவார் குல ராஜகம்பள நாயக்கர் சமுதாயத்தில் உள்ள 10 அணிகள் பங்கேற்றன‌‌. ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர் என்ற கணக்கில் போட்டிகள் நடைபெற்றது.

கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வண்டானம் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story