கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா


கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
x

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கிரிக்கெட் கழகம் சார்பில் ஆண்டு விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, சங்கர் நகர் ஐ.சி.எல். கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி கே.எஸ்.விஸ்வநாதன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கினர்.

இதில் 'ஏ' பிரிவில் இந்தியா சிமெண்ட்ஸ் அணி முதல் பரிசையும், ஜெ.பி.பி.எல். அணி இரண்டாம் பரிசையும் வென்றது. இதேபோல் 'பி' பிரிவில் டி.ஐ.எம். அணி முதல் பரிசையும், பவர் ஸ்டார் அணி இரண்டாம் பரிசையும் வென்றது. விழாவில் நெல்லை மாவட்ட கிரிக்கெட் கழக செயலாளர் ராம்குமார், பொருளாளர் பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story